பத்தினியா நீ? 2வது மனைவி மீது டவுட்; கணவனால் பலியான 8 மாத சிசு...

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (15:39 IST)
2வது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பிறந்து 8 மாதமேயான குழந்தையை கணவன் கொன்றது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சின்ன புள்ளையா. இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் தனது முதல் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்று சிறை தண்டனை அனுபவித்து மீண்டும் 2வது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 
 
சின்ன புள்ளையாவுக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் சின்ன புள்ளையாவுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே பல முறை தகராறு நடைபெற்று இருந்துள்ளது. 
 
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டைபோட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்ற அருகில் உறங்கிக்கொண்டிருந்த தனது 8 மாத குழந்தையை எடுத்து தரையில் வீசி எறிந்து உள்ளார்.
 
இதனால் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. அதோடு தனது மனைவியை கத்தியால் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த கோர சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, சின்ன புள்ளையாவை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்