மாணவர்களிடம் ஹீரோவாக மாறிவரும் முதலமைச்சர் ! ருசிகர தகவல்

புதன், 5 ஜூன் 2019 (15:33 IST)
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் 150 மேற்பட்ட தொகுதிகளிலும் , மக்களவைத் தேர்தலிம் அதிக தொகுதிகளிலும் ஜெயித்த தற்போது ஆந்திர மாநிலத்தின் இளம் முதல் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். இதனால் மக்களிடம் அவரது மதிப்பு உயர்ந்துவருகிறது.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி விசாக பட்டிணத்தில் உள்ள ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்றார். அப்பொது விசாகப்பட்டிண விமான நிலையத்துக்கு வரும்போது, விமான நிலைத்தில் சில கல்லூரி மாணவிகள் பதாகைகளுடன் நின்றிருந்தனர்.
 
அவர்களைப் பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடன் விசாரித்தார்.
 
பின்னர் மாணவர்கள் கூறியதாவது :
 
எங்கள் கல்லூரியி படிக்கும் மாணவர் நீரஜ்ஜுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது. அவர் தற்போது கல்லூரிக்கு வருவதில்லை. தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியே கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
நண்பர் நீரஜ்ஜின் குடும்பம் மிக ஏழ்மையானது. அதனால் அவனது மருத்துவச் செலவுகளுக்காக அரவு உதவ வேண்டும். அப்படி செய்தால் அவன் உயிர் பிழைத்துக்கொள்வார் என்று கோரிக்கை விடுத்தனர். 
 
இந்நிலையில் இதைக்கேட்ட ஜெகன் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ரூ. 2 லட்சம் உதவி செய்வதாக உத்தரவு வழங்கியுள்ளார்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி குறித்து மாணவர்கள் கூறியதாவது : ஆறு நாட்கள் நாங்கள் இதற்காக அழைந்தோம்...ஆனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆறு நீடங்களில் இந்த உத்தரவை பிறப்பித்துவிட்டார். என்று நெகிழ்ச்சியுடன் கூறியுனர்.
 
இந்நிலையில் சினிமா படத்தில் வருவது போன்று மாணவர்களின் கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்டு உடனே செயல்படுத்தியதால்  ஜெகன்மோகன் ரெட்டியை நிஜ ஹீரோ போன்று மாணவர்கள் பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்