மிதந்து வந்த சூட்கேஸ்... ப்ளாஸ்டிக் கவரில் கிடந்த ஆணின் உடல் பாகங்கள்...

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:46 IST)
மும்பை கடற்கரை பகுதியில் மிதந்து வந்த சூட்கேஸ் ஒன்றில் ஆணின் உடல் பாகங்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை முக்கிய கடற்கரைப் பகுதியில், காலையில் வாக்கிங் சென்றவர்கள்  சூட்கேஸ் ஒன்று கடல் நீரில் மிதப்பதை கண்டு உள்ளனர். இதனோடு அதிர்ச்சிக்குள்ளாகும் விதமாக அந்த சூட்கேஸில் கால் ஒன்று நீட்டியிருப்பதையும் கண்டுள்ளனர். 
 
இதனால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, ஆண் நபரின் ஒரு கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை பிளாஸ்டிக் பைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
 
இதனால் வழக்கு பதிவு செய்து கொலையான நபர் யார் என விசாரணை ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த நபரின் தலையையும் மீத உடல் பாகங்களையும் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்