இன்று ஆளுனருடன் சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:35 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் இன்றே ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும் மம்தா பானர்ஜி அவர்கள் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்று, அடுத்த 6 மாதத்திற்குள் வேறு ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்