இதனால் வலுவான பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அமைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களும் கூறியதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் திடீரென, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள 5 மாநிலங்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்விக்கு ஆதரவு அளிக்க மம்தா முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆதரவு பாராளுமன்றத்திலும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.