இது பாஜக அரசியல் வரலாற்றின் கடைசி பட்ஜெட்: மம்தா பானர்ஜி!

வியாழன், 1 பிப்ரவரி 2018 (19:19 IST)
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதோடு மற்ற கட்சிகள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய மக்கள் இன்று அனுபவித்துவரும் பல இன்னல்களுக்கும் ஆளும் மத்திய அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்திய மக்களுக்கு பாஜக ஆட்சி ஒரு பெரும் சுமையாக மாறிவிட்டது.
 
தேசியக் கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜக-வின் எந்த செயல்பாடுகளுக்கும் முறையான எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்த மூன்று கட்சிகளும் இந்தியாவின் பணக்காரக் கட்சிகள். ஆட்சியில் இருக்கும்போது சுரண்டிய அனைத்தையும் இன்று ஆட்சியில் இல்லாதபோது சுதந்திரமாக அனுபவித்து வருகிறார்கள்.
 
மத்திய அரசு தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக மட்டும் இருக்கக் கூடாது. இதுவே பாஜகவின் அரசியல் வரலாற்றின் கடைசி பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்