இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் மட்டுமே ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதன் கூட்டணி கட்சிகளே கழட்டிவிட தயாராக உள்ளனர். தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, அந்த கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி அமைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து நேற்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசினார். அப்போது தேசிய அளவில் அமைக்கவிருக்கும் 3வது அணியில் திமுக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இந்த புதிய கூட்டணியில் திமுக இணையுமா? அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்