மரண தண்டனை மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால்.. ஆளுனருக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (20:19 IST)
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா வரும் சட்டமன்ற தொடரில் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் மாளிகை முற்றுகை இடப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மம்தா பானர்ஜி, கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இந்த மசோதா இன்னும் பத்து நாட்களில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மசோதாவை ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்