அந்த அறிவிப்பில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜனவரி 22ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்றும் இந்த பேரணி செல்லும் வழியில் உள்ள மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் வழிபாடு நடத்தப்படும் என்றும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள அனைத்து மக்களையும் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் தனது கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழா என்பது ஒரு அரசியல் விழாவாக மாறிவிட்டதாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அதே நாளில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.