ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம் பி பிரமோத் திவாரி என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ் கொடுக்க பாஜகவினர் யார்? அயோத்தி எங்களுக்கு நம்பிக்கை கூறிய விஷயம், அழைப்பிதழ் இல்லாமல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அயோத்தி செல்வார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.