விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

Mahendran

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (17:32 IST)
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்கள் பகுதியளவு, முழுமையாக ரத்து செய்யப்படுவது, தாமதமாக இயக்கப்படுவது மற்றும் புறப்படும் இடம் மாற்றம் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
பகுதியளவு ரத்து மற்றும் தாமதமான ரயில்கள்:
 
தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (66045): ஆகஸ்ட் 23 அன்று தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.
 
விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (66046): ஆகஸ்ட் 23 அன்று விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த ரயில், முண்டியம்பாக்கத்திலிருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.
 
திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (22676): ஆகஸ்ட் 20 அன்று மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக, 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக, மதியம் 12.45 மணிக்கு புறப்படும்.
 
கடலூர் துறைமுகம் - மைசூரு விரைவு ரயில் (16231): ஆகஸ்ட் 20 அன்று மதியம் 3.40 மணிக்கு பதிலாக, 50 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
 
விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (66019): ஆகஸ்ட் 23 அன்று மதியம் 2.35 மணிக்கு பதிலாக, 25 நிமிடங்கள் தாமதமாக, மதியம் 3 மணிக்கு புறப்படும்.
 
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
 
விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் (66063): ஆகஸ்ட் 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
 
புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் (66064): ஆகஸ்ட் 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
 
பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்