அதன் பின்னர் காயத்தில் இருந்து குணமாகி உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்துப் பேசியுள்ள ஷமி “என்னால் நான்கு நாட்கள் நடக்கும் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாதா? இதுகுறித்து நான் முன்பே பேசிவிட்டேன். தேர்வு என்பது என் கையில் இல்லை. எனக்கு ஃபிட்னெஸ் பிரச்சனை இருந்தால் நான் பெங்கால் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்க மாட்டேன். நான் எதுவும் பேசி தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை.” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.