ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

Senthil Velan

திங்கள், 27 மே 2024 (15:24 IST)
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
 
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது என்றும் சமாஜ்வாதி கட்சி 4 இடங்களைத் தாண்டாது என்றும் தெரிவித்தார். 
 
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று அமித்ஷா கூறினார்.
 
ஜூன் 4ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை என குறை கூறுவார் என அவர் தெரிவித்தார். 

ALSO READ: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?
 
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்