ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

Prasanth Karthick

புதன், 22 மே 2024 (08:45 IST)
ஒடிசாவில் தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழர் ஆள வேண்டுமா என வி.கே.பாண்டியனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளர்.



இந்தியாவில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து தற்போது வட மாநிலங்களில் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் பாஜக தலைவர்கள் பலர் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களையும், அதன் மக்களையும் விமர்சிக்கும் போக்கில் பிரச்சாரங்களில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிசாவை தமிழர்கள் ஆள வேண்டுமா? என கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.

ALSO READ: 4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடந்த பரப்புரையில் பேசிய அவர் “ஒடிசாவின் கலாச்சாரத்தையும், சுயமரியாதையையும் நவீன் பட்நாயக் நெரித்து விட்டார். பிஜூ ஜனதா ஆட்சியில் ஒடிசா மாநிலம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. வீடு, குடிநீர் வசதி இல்லாமல் 25 லட்சம் மக்கள் இருக்கின்றனர். ஒடிசாவை தமிழ் மொழி பேசுபவர் ஆள வேண்டுமா? அல்லது மண்ணின் மைந்தர் ஆளவேண்டுமா? சிந்தியுங்கள்” என பேசியுள்ளார்.

பிஜூ ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தமிழருமான வி.கே.பாண்டியனை டார்கெட் செய்து அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து தென் மாநிலங்களை எதிராளிகளாக பாவித்து வடமாநிலங்களில் பாஜக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்