புலிக்குட்டிகளுக்கு சிம்பன்சி ரக குரங்கு ஒன்று புட்டி பால் கொடுத்து பராமரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காட்டு விலங்குகள் என்றாலே ஆக்ரோஷமானவை, ஒன்றை ஒன்று வேட்டையாடக்கூடியவை என்று பொதுவாக மனிதர்களாகிய நாம் அறிந்து வைத்திருந்தாலும், சில சமயம் அதிசயமாக விலங்குகள் பல செயல்பாடுகள் மாற்றம் அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
பொதுவாக உயிரியல் பூங்காவில் வளரும் விலங்குகள் பூங்கா பராமரிப்பாளர்களிடம் பாசமுடன் நடந்து கொள்வது இயல்பு. ஆனால் ஒரு பூங்காவில் சிம்பன்ஸி ரக குரங்கு ஒன்று புலிக்குட்டிகளை பராமரித்து வளர்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சாதாரண புலிக்குட்டிகளும், ஒரு வெள்ளைப்புலி குட்டியும் அந்த பூங்காவில் வளர்கின்றன. அவற்றுக்கு அங்குள்ள குரங்கு ஒன்று புட்டியில் பால் புகட்டுவதுடன், அவற்றை தூக்கி கொஞ்சி விளையாடுகிறது. இந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனர் ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Sometimes you feel like your kids belong to a different species but youre crazy about them nevertheless!