போராட்டத்தில் ச்சீச்சீ... போலீசார் மீது எச்சில் துப்பிய காங். தலைவி

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (08:44 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த 4 நாட்களாக அமலாக்கத் துறை அலுவலகம் முன் ஆஜராகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 

 
இந்த நிலையில் நேற்று 5-வது நாளாகவும் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் என்பதும் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நீடித்ததாகவும் ஐந்து நாட்களில் ஐம்பத்தி நான்கு மணி நேரம் மொத்தம் அவரிடம் விசாரணை நடைபெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போராட்டத்தில் மகிளா காங்கிரசின் தலைவி நெட்டா டி சோசாவும் கலந்து கொண்டார். காவல்துறையினர் அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீஸ் வேனில் உள்ளே நின்றபடி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், திடீரென வேனுக்கு வெளியே நின்றிருந்த போலீசார் மீது எச்சில் துப்பினார். இது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்