ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

வியாழன், 30 ஜூலை 2020 (08:11 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 வரை ஏற்கனவே ஆறாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று அன்லாக் 3.0 குறித்த விதிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது
 
இந்தியாவில் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதாவது மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகஸ்ட் 5 முதல் திறந்து கொள்ளலாம் என்றும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா தியேட்டர்கள்,  உணவகங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை என்றும் மால்களில் செயல்படும் உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் அரசு அலுவலகங்கள், நகராட்சி நிர்வாகங்கள், பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள், கருவூலங்கள் ஆகியவை 15 சதவிகித ஊழியர்களுடன் மட்டும் செயல்படலாம் என்று மகாராஷ்டிர மாநிலம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்