நிலவில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகள் கால் பதித்து எவ்வளவோ ஆய்வுகள் செய்திருந்தாலும், இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் கால் வைக்க முடியாத நிலவின் தென் துருவத்தில் தன் முதல் காலடியை வைத்து வரலாறு படைக்க உள்ளது இந்தியா. சமீபத்தில் இந்தியாவிற்கு முன்னதாக தென் துருவத்தில் கால் வைக்க ரஷ்யா ஏவிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது.
ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான இண்டெஸ்டெல்லார் படத்திற்கான பட்ஜெட் சுமார் 165 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட சந்திரயான் – 3 பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால் எளிமையான அறிவியல் யுத்திகளையும், கூட்டு உழைப்பையும் செலுத்தி இந்த குறைந்த பட்ஜெட்டில் வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை படைத்துள்ளனர் நம்நாட்டு விஞ்ஞானிகள்.