நிலவில் இறங்கும் சந்திரயான்-3! கடைசி “திக் திக்” மணித்துளிகள்! – நேரடி ஒளிபரப்பு!

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:07 IST)
இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டத்தின் படி சந்திரயான் – 3 விண்கலம் நிலவை ஆய்வு செய்த கடந்த மாதம் ஜூலையில் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் வட்டப்பாதையை சுற்றி வந்து அதிலிருந்து விலகி நிலவின் வட்டப்பாதைக்குள் புகுந்து நிலவை நெருங்கியுள்ளது சந்திரயான் – 3.

சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு சில கிலோமீட்டர்கள் மேலே உயரத்தில் சுற்றி வரும் விக்ரம் லேண்டர் மெல்ல நிலவில் தரையிறங்க தயாராகி வருகிறது. நாளை மாலை 5 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணிகள் தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கபோகும் தென் துருவம் இதுவரை உலக நாடுகள் யாரும் கால்பதிக்காத நிலவின் பகுதி என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயான் – 3 படைக்கபோகும் சாதனைக்காக ஆர்வமாக காத்திருக்கிறது.

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையாக காண இஸ்ரோ ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்த நேரலையை இஸ்ரோவின் இணையதளம் Indian Space Research Organisation (isro.gov.in) மற்றும் இஸ்ரோவின் பேஸ்புக் பக்கம், யூட்யூப் சானலிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்