விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு.. தென்னாப்பிரிக்காவில் இருந்து இணையவழியில் பங்கேற்கு பிரதமர் மோடி..!

புதன், 23 ஆகஸ்ட் 2023 (11:56 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க இருக்கிறது. 
 
உலகிலேயே  நிலவின் தென்துருவத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றிகரமாக தடம் பதிக்கும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்க உள்ளது
 
இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இஸ்ரோவின் நேரடி ஒளிபரப்பான விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிகழ்ச்சியை இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோ நேரலையில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இதில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்