எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் நிறைவேறியது ஜிஎஸ்டி

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (22:47 IST)
கடந்த சில மாதங்களாக இந்திய மக்களால் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த ஜிஎஸ்டி மசோதா சற்று முன்னர் பாராளுமன்றத்தின் மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவின் நான்கு பிரிவுகளும் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியுள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது மத்திய அரசு தனக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகவே கருதுகிறது.

முன்னதாக இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையின் அலுவல் பட்டியலில் மசோதா தாக்கல் செய்வது தொடர்பான விவரம் இடம்பெறவில்லை என்றும், மசோதாவை விரிவாக படிப்பதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
 
அடுத்த கட்டுரையில்