45 நாட்களாக நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த வந்ததும், டாக்டர்கள் உள்பட அனைவரும் தன்னலம் கருதாது சேவை செய்வததும் ஒரே நாளில் மதுக்கடைகளை திறந்து விட்டதால் போய்விட்டது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் அரசு, திடீரென மதுக்கடைகளை திறக்க அனுமதி உள்ளது. இதனால் சமூக விலகல் என்பது காற்றில் பறக்க விடப்பட்டதால் தற்போது கொரோனா வைரஸ் மிக அதிகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மதுக்கடைகளில் நீண்ட வரிசைகளில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்பதால் கொரோனா வைரஸ்க்கு கொண்டாட்டமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் 45 நாட்கள் கோடிக்கணக்கானோர் கஷ்டப்பட்டு அனுபவித்த ஊரடங்கு ஒரே ஒரு நாளில் மதுக்கடைகளை திறந்து அரசே விட்டதால் கெட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
மேலும் இலட்சக்கணக்கான டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் செய்த தியாக மனப்பான்மையும் கூட சேவைக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது என்றும் ஒரே ஒரு நாள் மதுக் கடைகளைத் திறந்ததால் அவை அனைத்தையும் வேஸ்ட் ஆகிவிட்டது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
கொரோனா நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மதுக்கடைகளை பூட்டியே ஆக வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மதுக்கடைகளை திறப்பதில் அரசு உறுதியாக இருப்பதால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது என்பது முடியாத காரியம் என்றே கருதப்படுகிறது