இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Epidemic Act And Regulation என்ற பிரிவு 8 -ன் படி தடைசெய்யப்ப்பட்டுள்ளது.