காவிரி விவகாரம்: எல்ஐசி அலுவலகம் மீது தாக்குதல்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (14:11 IST)
தஞ்சையில் காவிரி வேலாண்மை அமைக்ககோரி எதிர்க்கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில் எல்ஐசி அலுவலகம் சரமாரியாக கற்களால் தாக்கப்பட்டது.
 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..
 
இந்நிலையில், காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தை திமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட எதிர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது திடிரென போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் இருந்த கற்களை எடுத்து எல்ஐசி அலுவலகத்தை தாக்கினர். 
 
இதனையடுத்து, போலீசார் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்