மின்சாரம் கட்டானால் பணம் தருவோம் : முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (19:37 IST)
புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். இவர் இன்று  முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், முன் அறிவிப்பில்லாமல் மின்சாரம் கட் ஆகுமானால் எவ்வளவு நேரம் மின்சாரவெட்டு ஏற்பட்டதோ அதற்குத் தகுந்தாற்போல டெல்லி மக்களுக்கு இழப்பீடாக பணம் வழங்கப்படும் என அறிவிப்பு விடுத்துள்ளார்.
 
அதாவது 1 மணிம் நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் ரூ.50 இழப்பீடாக வழங்கப்படும் எனவும், 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். முக்கியமாக இந்த அறிவிப்பில் ரூபாய்.5000 வரை இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்  கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
இந்தத் திட்டத்தை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
முதல் அறிவிப்பிற்கு ஏற்றாற்போல மின்சார ஒழுங்கு முறை ஆணையம்  விதிகளை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிகிறது.
 
முதல்வரின் இந்த திட்டத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தன் டிவிட்டர் பதிவில் , ’இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முன் அறிவிப்பு இல்லாமல் மின்சார வெட்டு ஏற்பட்டதற்காக டெல்லி அரசு இழப்பிடு வழங்கி உள்ளது.என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்