கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக எதிர்க்கட்சி ஆனது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 145 தொகுதிகளிலும் 364 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 138 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் பேட்டி ஒன்றில் கூறியபோது, '2004-ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்று கூறினார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.