4 வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (11:42 IST)
முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் சம்பத்தப்பட்ட மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில், லாலு பிரசாத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீது சுமத்தப்பட்ட 3 மாட்டுத்தீவன வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு 13.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியென ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில் கால்நடை ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்