மாணவர் நவீன் மரணத்திற்கு நீட் தேர்வே காரணம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (21:12 IST)
கர்நாடக மாநில மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் என்பவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென வீசிய குண்டு வெடிப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் கர்நாடக மாணவர் நவீன் மரணத்திற்கு நீட்தேர்வு காரணமென முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு நீட்தேர்வு காரணம் என்றும் பள்ளியில் 90 சதவீத மதிப்பெண் பெற்ற நவீன் நீட்தேர்வு காரணமாக இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உடன் சென்றார் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்
 
மேலும் இது நாட்டுக்கு அவமானம் என்றும் நீட்தேர்வால் இன்னும் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்