சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிறகு நடந்த முதல் கொலை: பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:44 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக அப்பாவி மக்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர்-லடாக் ஆகிய பகுதிகளை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், அப்துல் காதிர் மற்றும் அவரது உறவினரான மன்சூர் அகமது ஆகிய இருவரும் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், அப்துல் காதர் மற்றும் மன்சூர் அகமது ஆகியோரின் சடலங்கள் டிரால் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இருவரையும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இந்த கொலைகளை செய்தது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்னும் பயங்கரவாத அமைப்பு தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்