இதற்கு அண்டைநாடான பாகிஸ்தான் கடும் எதிப்பு தெரிவித்து அமெரிக்கா, சீனா முதல் ஐநா வரை சென்று முறையிட்டும் அது இந்திய நாட்டு உள்விவகாரம் என்று கூறி பாகிஸ்தனின் வாயை அடைத்துவிட்டது. இருப்பினும் காஷ்மீரின் சில பகுதிகளில் இன்னும் தொலைபேசி, இணையம் இணைப்பு தரப்படவில்லை எனவும், சில இடங்களீல் இன்னமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் மாநில கவர்னர் சத்ய மால் மாலிக் , ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ளதாவது : காஷ்மீரின் அமைதியை சீர்குலைகும் எண்ணத்துடன் அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். ராகுல்காந்தி தனது அழைப்பை அரசியலாக்கியதால்தான் அந்த அழைப்பை நான் திரும்ப பெற்றேன். ராகுல் காந்தி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதன் முலம் காஷ்மீருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவருகிறார் என தெரிவித்துள்ளார்.