அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா மறைவுக்கு கேரள அரசு துக்கம் அனுஷ்டித்துள்ளது.
உலக புகழ்பெற்ற அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரான டியாகோ மரடோனா மாரடைப்பால் மரணமடைந்த செய்தி உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அவரது இழப்பிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டியாகா மர்டோனாவை கவுரவிக்கும் விதமாக அர்ஜெண்டினாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அவரது இழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள விளையாட்டு துறை சார்பில் டியாகோ மர்டோனாவுக்கு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரடோனாவின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.