வேலூரை வெளுத்த மழை; கரை மீறிய வெள்ளம்! – மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (16:10 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் வேலூரில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது. தீவிர புயலாக உருவெடுத்த நிவர் கரையை தொடும் முன்னர் அதி தீவிர புயலாக மாறி மணிக்கு 145 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதாரமடைந்துள்ளதுடன், ஏகபட்ட மரங்களும் சாய்ந்துள்ளன.

நிவர் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. வேலூரில் பெய்து வரும் அதீத கனமழையால் பள்ளிக்கொண்ட பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கரைப்பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்