பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய ராணுவம் அதன் 2.0 வெர்ஷனை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அளித்த நிலையில், பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் மூண்டது
பின்னர் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராணுவ வீரர்கள் முகாமில் பேசிய இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி “தேசத்தை கட்டி எழுப்புவதில் இந்திய ராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். மக்களுக்கு நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் நோக்கத்தை அடையும் வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும். விரைவில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 ஐ தொடங்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K