கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த இளைஞர் ஆனந்து அஜி மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன் ஆனந்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், பல ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஆர்.எஸ்.எஸ். கோட்டயம் பிரிவு, ஆனந்தின் மரணத்தை 'துரதிர்ஷ்டவசமானது' என்று குறிப்பிட்டதுடன், சமூக ஊடகங்களில் உள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள், ஆனந்து மனநல பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சங்கத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தன. ஆனந்தின் இறுதி பதிவின் நம்பகத்தன்மை குறித்தும் தொழில்நுட்ப சரிபார்ப்பு தேவைப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.