கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கிய கூலித்தொழிலாளிக்கு ரூ.75 லட்சம் பரிசு..!

வியாழன், 23 மார்ச் 2023 (08:42 IST)
கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 55 வயது பாபுலால் என்ற கூலி தொழிலாளி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மாமா குடும்பத்தினருடன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தினமும் கிடைக்கும் கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் வைத்து தான் இவர் தனது குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் இளம்பெண் ஒருவரிடம் வழக்கமாக பரிசு சீட்டு வாங்குவது உண்டு. 
 
அப்போது குழுக்கல் நாள் நெருங்கிவிட்டது என்றும் ஒரு லாட்டரி சீட்டு விற்பனையாகாமல் இருப்பதால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். லாட்டரி வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் இப்போது வாங்கிக்கொண்டு பிறகு பணம் தந்தால் போதும் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து சீட்டை பாபுலால் வாங்கிய நிலையில் அந்த சீட்டுக்கு 75 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு கிடைத்ததை அடுத்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்