பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? நோபல் கமிட்டியின் துணை தலைவர் கருத்து
வியாழன், 16 மார்ச் 2023 (14:44 IST)
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்திய பிரதமர் மோடி போட்டியாக இருப்பார் என நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் கமிட்டியின் தலைவர் இந்தியா வந்துள்ள நிலையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது உலகில் அமைதியை நிலைநாட்ட நம்பிக்கைக்குரிய தலைவராக இந்திய பிரதமர் மோடி உள்ளார் என்றும் உலகின் மூத்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர் என்று தெரிவித்தார்
மேலும் அமைதிக்கான நோபல் பரிசுகளில் நம்பத் தகுந்த முகங்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உள்ளார் என்றும் அவர் அந்த பரிசுக்கான போட்டியாக முக்கிய போட்டியாளராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்