பத்மாவத் படத்துக்கு எதிராக கலவரம்; பள்ளி குழந்தைகள் வாகனம் மீது தாக்குதல்; வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (14:44 IST)
பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 
பல தடைகளை கடந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவத் திரைப்படம் நேற்று வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் பத்மாவதி என்ற பெயரில் வெளியாக இருந்த திரைப்படத்துக்கு வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
 
திரைப்படத்தை வெளியிட கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று குர்கான் பகுதியில் கார்னி சேனா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
 
பல இடங்களில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. குர்கான் பகுதியில் பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்திய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்