பத்மாவத் திரைப்பட விவகாரம்: தவறை உணர்ந்த போராட்டக்காரர்கள்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (22:50 IST)
தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. குறிப்பாக பத்மாவதியை தெய்வம் போன்று வணங்கி வரும் ராஜஸ்தானில் இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது

இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் பத்மாவத் திரைப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கான காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த காட்சி முடிந்த பின்னர் படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்து வருகிறது.

மேலும் பத்மாவதியை தவறான நோக்கத்துடன் சித்தரிக்கும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. அதற்கு பதிலாக பத்மாவதியின் புனிதத்தை உயர்த்தும் வகையில் அருமையான பல காட்சிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே போராட்டக்காரர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருவதாக டுவிட்டரில் வெளியாகும் பதிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்