பறவை சிறகில் பறந்து வந்த வீர சாவர்க்கர்?? – பள்ளி பாட புத்தகத்தால் சர்ச்சை!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:08 IST)
கர்நாடக பள்ளி பாட புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள பகுதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில் கர்நாடக பள்ளி பாட புத்தகம் ஒன்றில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள பாடம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கர்நாடக பள்ளிகளில் உள்ள 8ம் வகுப்பு கன்னட பாட புத்தகத்தில் ”காலத்தை வென்றவர்கள்” என்ற பகுதியில் சாவர்க்கர் வாழ்க்கை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு பத்தியில் “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், புல்புல் பறவைகள் அவர் அறைக்கு வருவது வழக்கம். சாவர்க்கர் அந்த பறவைகளின் சிறகுகளில் அமர்ந்து பறந்து ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்குச் சென்று வந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களிலும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் பலரும் பாஜக வரலாற்றை மாற்றியும், உண்மைக்கு புறம்பான சம்பவங்களை கூறியும் வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்