வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பி மீது தாக்குதல்.. மே.வங்க அரசுக்கு கடும் கண்டனம்..!

Siva

திங்கள், 6 அக்டோபர் 2025 (15:01 IST)
மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பணிகளை ஆய்வு செய்ய சென்ற பா.ஜ.க. எம்.பி.யும் பழங்குடியினத் தலைவருமான காகேன் முர்மு மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரது கார் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
 
வடக்கு வங்காளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பூஜா கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "நிவாரணப் பணிகளைத் தடுப்பதற்காகவே மம்தா தனது கூலிகளை ஏவிவிட்டு, பா.ஜ.க. தலைவர்களை தாக்கச் செய்கிறார்" என்று 'எக்ஸ்' தளத்தில் குற்றம் சாட்டினார்.
 
பா.ஜ.க. தலைவர் அமித் மாளவியா, இந்த சம்பவத்தை "திரிணாமுல் காங்கிரஸின் காட்டுமிராண்டி ஆட்சி  என்று வர்ணித்தார். நிவாரணம் வழங்கும் பா.ஜ.க.வினர் தாக்கப்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
 
மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார், "காகேன் முர்மு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை நிரூபிக்கிறது. இதற்கு ஜனநாயக வழியில் போராடுவோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
 
இதற்கிடையே, வடக்கு வங்கத்தில் பெய்த கனமழையால் டார்ஜிலிங் பகுதியில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்