குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்!

புதன், 23 மே 2018 (16:53 IST)
கர்நாடகாவில் ஆளுநர் வஜூபாய் வாலா முன்னிலையில் முதலைமச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி.
 
கர்நாடகாவை கைப்பற்றவிருந்த பாஜகவின் முயற்சியை வீழ்த்தி காங்கிரஸ் - மஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜக ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் இல்லாத போதிலும் ஆளுநர் உதவியுடன் ஆட்சியமைக்க கால அவகாசம் கோரி முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இன்று பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுநர் வஜூபாய் வாலா முன்னிலையில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக பதவியேற்றார். மேலும், அவருடன் துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரும் பதவியேற்றார்.
 
இந்த பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, பினராய் விஜயன், சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்