2025 நோபல் பரிசு: மருத்துவ துறையில் 3 பேருக்கு நோபல்!

Prasanth K

திங்கள், 6 அக்டோபர் 2025 (15:30 IST)

2025ம் ஆண்டிற்கான நோபல் விருதுகள் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளான இன்று மருத்துவ துறைக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது.

 

ஸ்வீடன் நாட்டு அறிவியல் ஆய்வாளரும், செல்வந்தருமான ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்காக நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 

அவ்வாறாக இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரான்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று பேருக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது, புற நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்