கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

செவ்வாய், 27 மார்ச் 2018 (08:29 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற காலம் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்ப்டும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன

இந்த நிலையீல் கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். இந்த நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்