’கராச்சி’ எனும் பெயரே இருக்கக்கூடாது... பெங்களூரில் பரபரப்பு...

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (18:51 IST)
பெங்களூரில் உள்ள  ஒரு பிரசித்தி பெற்ற பேக்கரியின் பெயர் கராய்ச்சி ஆகும். இப்பெயரே இங்கு இருக்கக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் நாளில் காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதப் போராளிகள் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
 
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு இருந்துள்ளது  என்று அனைவரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
 
ஆனால் இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் மறுத்தார். இந்நிலையில் உலக நாடுகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தது.
 
இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் அடையாளத்துடன் இயங்கிவரும் பல்வேறு தொழில் நிறுவனக்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள கராச்சி பேக்கரி என்ற கடையில் இருக்கும் காராச்சி என்பதை நீக்கக்கோரி சிலர் ஆக்ரோசமாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடையின் பெயர் பலகை அகற்றப்பட்டதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்