தலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்

சனி, 23 பிப்ரவரி 2019 (17:53 IST)
இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதனால், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சிவாவை வைத்து மற்றொரு படம் தயாரிக்க இருப்பதகாவும், இந்த அப்டத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அந்த படத்தை சிவாதான் இயக்குகிறார் என்பது தகவல். இப்படம் ஆக்சன் படமாக இருக்க கூடும் என தெரிகிறது. 
 
தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்