எதிர்பாரா திருப்பம்: கமல் - டிடிவி.தினகரன் கூட்டணி?

Webdunia
திங்கள், 21 மே 2018 (18:47 IST)
எதிர்காலத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து செயல்பட்டால் அதில் அச்சர்யபடுவதற்கு ஏதுமில்லை என தெரிவித்துள்ளார் தங்க.தமிழ்செல்வன்.
 
கடந்த 19 ஆம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், காவிரிக்கான தமிழகத்தின் குரல் கூட்டம் நடத்தப்பட்டது. 
 
இதில், பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் கலந்துகொண்டார்.
 
இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் தங்க. தமிழ்செல்வன். அவர் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் சார்பாக, கமல்ஹாசன் நடத்திய விவசாயிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் அமமுக பங்கேற்றது. 
 
ஆனால், இந்த கூட்டணி தொடருமா என்று இப்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் காக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக இணைந்தால் ஆச்சர்யமில்லை என்று பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்