ஓர் ஆண்டு ஆட்சியை பாராட்டிய கமல்ஹாசன்: ஆச்சரியமாக இருக்கின்றதா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:21 IST)
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடந்தபோது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தேர்தல் நடந்தது. எனவே கேரளாவிலும் புதிய ஆட்சி தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் முழுமையாகியுள்ளது.



 


இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் ஓராண்டு கம்யூனிச ஆட்சி ஆட்சியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு இமெயில் அனுப்பியுள்ளாராம்.

அந்த இமெயிலில்  'கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்