7 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் என் முன் ஆஜராக வேண்டும். நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (23:44 IST)
சமீபத்தில் கொல்கத்தா நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததோடு மட்டுமின்றி நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.


 


இந்த நிலையில் தன்னை ஆஜராக உத்தரவு பிறப்பித்த ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணி அளவில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த ஏழு பேர்களில் இந்தியாவின் தலைமை நீதிபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற நீதிபதிகளையே ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஏழு நீதிபதிகளும் தங்களது பாஸ்போர்ட்டினை 15 நாள்களுக்குள் டெல்லி போலீஸ் இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியினை ஆஜராக சொல்வதற்கு இன்னொரு நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என கூறிய நீதிபதி கர்ணன் அவர்களே இப்போது ஏழு நீதிபதிகளை ஆஜராக உத்தரவிட்டிருப்பது முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்