ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜியோ.. டிஜிட்டல் பேங்கிங் சேவையில் அம்பானி..!

Mahendran

வெள்ளி, 31 மே 2024 (10:30 IST)
ஜியோ நிதி சேவை நிறுவனம் நேற்று ஜியோ ஃபைனான்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்த நிலையில் இந்த செயலி தற்போது பீட்டா வெர்ஷனாக வெளிவந்துள்ளதாகவும், இந்த செயலி மூலம் யுபிஐ, டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பல நிதி சேவைகளை பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் நாளுக்கு நாள் யுபிஐ சேவையை பயன்படுத்தும் பயனர்கள்  எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஜியோ நிறுவனம் டிஜிட்டல் பேங்கிங், யுபிஐ, பில் செட்டில்மென்ட்ஸ், இன்சூரன்ஸ் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
 
ஏற்கெனவே கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என செயலிகள்  மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் தற்போது அம்பானியின் ஜியோ ஃபைனான்ஸ் செயலியும் அறிமுகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்