முதன்முறையாக அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார் மோடி: ராகுல் காந்தி

Siva

வியாழன், 9 மே 2024 (07:51 IST)
முதல்முறையாக பிரதமர் மோடி தனது நண்பர்கள் அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்தாண்டு வெளியான போது கூட வாயை திறக்காத பிரதமர் மோடி முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி, அதானி பெயரை உச்சரித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி தனது நண்பர்களையே பகைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

தேர்தல் அறிவித்த தேதியில் இருந்து அம்பானி அதானியை பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்றும் அம்பானி அதானிடம் இருந்து எவ்வளவு தொகை அவர் பெற்றிருக்கிறார் என்றும் பிரதமர் மோடி நேற்று கேள்வி எழுப்பினார்

அவருக்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி ’மோடிஜி அவர்கள் பயந்துவிட்டார், அதானியும் அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பி தருகிறார்களா? இது உங்களின் சொந்த அனுபவமா? பாஜகவின் ஊழல் டெம்போவின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் யார் என்பது நாட்டுக்கே தெரியும், ஒன்று செய்யுங்கள், அவர்களுக்கு சிபிஐ அமலாக்க துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ள வையுங்கள், அச்சப்பட வேண்டாம்’ என்று சவால் விடுத்துள்ளார் இந்த சவால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்